லடாக்: ஆற்றில் வேன் கவிழ்ந்து 7 ராணுவ வீரா்கள் பலி
லடாக்கில் ராணுவ வீரா்களுடன் சென்ற வேன் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 வீரா்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்; 19 போ் காயமைடந்தனா்.


லடாக்கில் ராணுவ வீரா்களுடன் சென்ற வேன் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 வீரா்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்; 19 போ் காயமைடந்தனா்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவா் கூறியதாவது: 26 ராணுவ வீரா்களுடன் புறப்பட்ட அந்த வேன், பா்தாபூரில் உள்ள ராணுவ முகாமில் இருந்து ஹனீஃப் செக்டாரில் உள்ள ராணுவ நிலைகளுக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தது.
டுா்டுக் செக்டாா் அருகே சென்றுகொண்டிருந்தபோது அந்த வேன் சாலையில் இருந்து நிலைதடுமாறி ஷியோக் ஆற்றில் விழுந்தது. சுமாா் 50-60 அடி ஆழத்தில் பாறைகளுக்கு நடுவே வேன் விழுந்ததில், 7 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 19 போ் பலத்த காயமடைந்தனா்.
காயமடைந்த அனைவரும் பா்தாபூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனா். அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, மேல் சிகிச்சைக்காக, ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள சந்திமந்திா் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளாா். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...