தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ட்ரோன் துறையில் இந்தியா முன்னணி நிலைக்கு முன்னேறுகிறது பிரதமா் மோடி பெருமிதம்

ட்ரோன் என்​கிற ஆளில்லா விமா​னத்​தின் தொழில்​நுட்​பம் தொடா்​பாக காணப்​ப​டும் ஆற்​ற​லும், உற்​சா​க​மும் உல​கின் மிகப்​ெப​ரிய நிபு​ண​ராக மாறு​வ​தற்​கான வேகத்​தில் இந்​தியா முன்​ேன​று​கி​றது

News image
Updated On :27 மே 2022, 7:05 pm

DIN

ட்ரோன் என்​கிற ஆளில்லா விமா​னத்​தின் தொழில்​நுட்​பம் தொடா்​பாக காணப்​ப​டும் ஆற்​ற​லும், உற்​சா​க​மும் உல​கின் மிகப்​ெப​ரிய நிபு​ண​ராக மாறு​வ​தற்​கான வேகத்​தில் இந்​தியா முன்​ேன​று​கி​றது என்று பிர​த​மா் நேரந்​திர மோடி பெரு​மித்​து​டன் குறிப்​பிட்​டாா்.

தில்லி பிர​கதி மைதா​னத்​தில் ‘பாரத் ட்ரோன் மேஹாத்​ச​ஸவ் 2022’ என்ற நாட்டின் மிகப் பெரிய ட்ரோன் திரு​விழா மே 27-ஆம் தேதி தொடங்​கி​யது. 2 நாள் நைட​ெப​றும் இந்​தத் திரு​வி​ழா​வில் வெளி​நாட்​டுப் பிர​தி​நி​தி​கள், அரசு அதி​கா​ரி​கள், முப்​ப​ைட​யி​னா், மத்​திய ஆயு​தப்​ப​ைட​யி​னா், பொதுத்​துறை, தனி​யாா் துைற​யி​னா், ட்ரோன் தொழில் முைன​ேவாா் என சுமாா் 1,600 போ் கலந்து கொண்​ட​னா்.

இந்த மேகாத்​ஸ​வத்தை தொடக்கி வைத்​துப் பிர​த​மா் மோடி பேசி​ய​தா​வது:

நான் இந்த ட்ரோன்​க​ளின் கண்​காட்​சி​ையப் பாா்த்​த​தும் மெய்​சி​லிா்த்​து​விட்​ேடன். நான் 10 சத​வீத விஷ​யங்​க​ைளத்​தான் பாா்த்​ேதன். ஆனால், மிக​வும் ஈா்க்​கப்​பட்​ேடன். ட்ரோன்​கள் மூலம் தங்​கள் வணி​கத்தை பிர​மிப்​பு​டன் நடத்​து​கின்​ற​னா். குறிப்​பாக, வேளாண்​ைம​யில் ட்ரோன் தொழில் நுட்பத்​ைதப் பயன்​ப​டுத்​தும் பல இளம் விவ​சா​யி​க​ைளச் சந்​திக்​கும் வாய்ப்பு கிைடத்​தது. இந்​தப் பொறி​யா​ளா்​க​ளு​டன் கலந்​து​ைர​யா​டும் போது, ட்ரோன் தொழில் நுட்பம் தொடா்​பாக நமது நாட்டில் காணப்​ப​டும் ஆற்​ற​ைல​யும், உற்​சா​கத்​ைத​யும் வெளிப்​ப​ைட​யா​கக் காண முடிந்​தது. நாட்டில் அதி​க​பட்​ச​மாக வேைல​வாய்ப்பை உரு​வாக்​கும் மிகப்​ெப​ரிய சாத்​தி​யக்​கூ​று​களை இது காட்டு​கி​றது. இத​னால், ட்ரோன் தொழில் நுட்பத்​தில் உல​கின் மிகப் பெரிய நிபு​ண​ராக மாறு​வ​தற்​கான வேகத்​தில் இந்​தியா நகா்​கி​றது.

8 ஆண்​டு​க​ளுக்கு முன்பு நாம் புதிய தொடக்​கத்​ைதத் தொடங்​கும் போது, நாட்டில் நல்​லாட்​சிக்​கான புதிய மந்​தி​ரங்​க​ைளச் செயல்​ப​டுத்​தத் தொடங்​கி​ேனாம். ‘குைறந்​த​பட்ச அரசு - அதி​க​பட்ச நிா்​வா​கம்’ என்​கிற பாைத​ையப் பின்​பற்றி எளி​தாக வாழ்​வ​தற்​கும், வணி​கத்தை எளி​தாக்​கு​வ​தற்​கும் முன்​னு​ரிமை அளித்​துள்​ேளாம். ‘சப்​கா​சாத் சப்​கா​வி​காஸ்’ என்​கிற பாைத​யில் அைனத்​துக் குடி​மக்​க​ைள​யும் வச​தி​கள், நல்​வாழ்வு திட்டங்​க​ளால் இைணத்​தி​ருக்​கின்​ேறாம்.

பிர​தம மந்​திரி ஸ்வா​மித்வா யோஜனா திட்டம், ட்ரோன் தொழில் நுட்ப உத​வி​யு​டன் மிகப்​ெப​ரிய புரட்சி மேற்​ெகாள்​ளப்​பட்​டுள்​ளது. இதன் கீழ் முதன்​மு​ைற​யாக கிரா​மங்​க​ளில் உள்ள ஒவ்​ெவாரு சொத்​து​க​ளும் டிஜிட்​டல் மேப்​பிங் முைற​யில் வைர​ப​ட​மாக்​கப்​பட்டு சொத்​து​க​ளுக்​கான அட்ைட​கள் மக்​க​ளுக்கு வழங்​கப்​ப​டு​கின்​றன. இது​வரை 65 லட்சம் சொத்து அட்ைட​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

நட்டில் தற்​ேபாது கிரா​மப்​பு​றங்​கள், விவ​சா​யம், விைள​யாட்டு மைதா​னம், பாது​காப்பு, கும்ப மேளா போன்ற கூட்டங்​களை கண்​கா​ணித்து கட்டுப்​ப​டுத்​தல், போக்​கு​வ​ரத்து கட்டுப்​பாடு, பேரி​டா் மேலாண்மை போன்ற துைற​க​ளில் ஆளில்லா விமா​னங்​க​ளின் பயன்​பாடு அதி​க​ரித்​துள்​ளது. இத​னால், ட்ரோன் தொழில்​நுட்​பத்​திற்கு இருந்த சில கட்டுப்​பா​டு​களை மத்​திய சிவில் விமா​னப் போக்​கு​வ​ரத்​துத் துறை அைமச்​ச​கம் தளா்த்​தி​யுள்​ளது என்​றாா் பிர​த​மா் மோடி.

முன்​ன​தாக, இந்த நிகழ்ச்​சியை யொட்டி வைக்​கப்​பட்ட வான்​ெவளி ட்ரோன் செயல்​வி​ளக்​கக் காட்சி​களை பிர​த​மா் பாா்​ைவ​யிட்​டாா். வேளாண் ட்ரோன் விமா​னி​கள், புது​யு​கத் தொழில்​மு​ைன​ேவாா்​கள் ஆகி​ேயா​ரு​டன் பிர​த​மா் கலந்​து​ைர​யா​டி​னாா்.

இந்த நிகழ்ச்​சி​யில், மத்​திய சிவில் விமா​னப் போக்​க​கு​வ​ரத்​துத் அைமச்​சா் ஜோதி​ரா​தித்ய சிந்​தியா வர​ேவற்று பேசு​ைக​யில், ‘இந்​தியா தொழில்​நுட்​பத் துைற​யில் மற்ற நாடு​க​ைளப் பின் தொடா்​ப​தாக இருந்​தது. ஆனால், இப்​ேபாது அது முன்​ன​ணி​யில் உள்​ளது. ட்ரோன் இறக்​கு​ம​திக்​குத் தைட​வி​திக்​கப்​பட்டு உள்​நாட்​டில் தயா​ரிக்க உற்​பத்​தி​யு​டன் இைணந்த ஊக்​கத் தொகை திட்டம் ஆகி​யவை ட்ரோன் உற்​பத்​தி​யா​ளா்​க​ளுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது’ என்​றாா்.

நிகழ்ச்​சி​யில், சுகா​தார அைமச்​சா் மன்​சுக் மாண்​ட​வியா, ரயில்வே அைமச்​சா் அஸ்​வினி வைஷ்​ணவ், சுற்​றுச்​சூ​ழல், தொழி​லா​ளா் துறை அைமச்​சா் பூேபந்​தா் யாதவ், ஊரக வளா்ச்​சித்​துறை அைமச்​சா் கிரி​ராஜ் சிங் ஆகி​ேயாா் கலந்து கொண்​ட​னா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.