
ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான பீம் சிங் இன்று (மே-31) மருத்துவமனையில் காலமானார்.
ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி (Jammu & Kashmir National Panthers Party) ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் கட்சியாக 23 மார்ச் 1982 அன்று பீம் சிங் மற்றும் ஜெய் மாலா என்பவர்களால் நிறுவப்பட்டது. இதன் குறிக்கோள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊழல், இனவாதம், போதைப் பொருட்களை ஒழிப்பதும், உண்மையான ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே நோக்கமாக கொண்டு செயல்பட்டது.
பீம் சிங் அரசியல் கட்சி நிறுவனர் மட்டுமல்ல, வழக்கறிஞர், சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஆக சமூகத்திற்கு அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.
“மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தார். ஒரு வருடத்திற்கும் மேலாக உடல்நிலைக் குறைவினால் அவதிப்பட்டு வந்தவர் தற்போது மருத்துவமனையில் காலமானர்” என குடும்ப உறுபினர்கள் தெரிவித்தனர்.
இவரது மறைவிற்கு அரசியல்வாதிகள், வியாபாரிகள், சமூக சேவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு அங்கத்தினர்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.