காற்று மாசால் பத்தில் எட்டு குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு!
மோசமான காற்றின் தரத்தால், தலைநகர் தில்லியில் 10-ல் 8 குழந்தைகள் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வருவதாக குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


மோசமான காற்றின் தரத்தால், தலைநகர் தில்லியில் 10-ல் 8 குழந்தைகள் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வருவதாக குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தில்லியில் தொடர்ந்து காற்று மாசு ஏற்பட்டு வரும் நிலையில், இன்று காற்றின் தரம் ‘மிக மோசம்’ பிரிவுக்கு மாறியுள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பிரபல தனியார் மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவர் கூறியதாவது:
“வெளிநோயாளிகள் பிரிவில் வரும் குழந்தைகளில் 10இல் 8 பேருக்கு சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறு பிரச்னை இருப்பதாக கூறுகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் இருமல் மற்றும் சுவாசப் பிரச்னை இருப்பதாகவும் குழந்தைகள் மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள். கைக் குழந்தைகளால் இந்த பிரச்னையை சொல்ல முடியாததால், பெரும் பிரச்னை ஏற்படுகிறது.
நச்சு வாயு மற்றும் துகள்களின் மாசால் குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்படுகிறது.
பொதுவாக, குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்ற காய்ச்சலுக்கான் அறிகுறிகளுடன் ஆரம்பிக்கிறது. சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து மருந்துகள் மற்றும் நெபுலைசர்களில் வைத்த பிறகுதான் சரியாக சுவாசிக்க முடியும். இந்த பிரச்னைகள் அனைத்தும் நச்சு வாயுகள் குழந்தைகளின் நுரையீரலை பாதிப்பதால் ஏற்படுகிறது.
குழந்தைகள் முகக்கவசம் அணிவதுடன், அடிக்கடி கைகளை கழுவதுதான் ஒரே தீர்வு. இருமல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளிடமிருந்து இடைவெளிவிட்டு அமர வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...