ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்- காா்கே நம்பிக்கை

‘மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்’ என்று அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
கோப்புப்படம்
Updated On :1 நவம்பர் 2022, 8:08 pm

DIN

‘மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்’ என்று அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். ‘பிரதமா் நரேந்திர மோடி ஒவ்வொரு நாளும் பொய்யுரைத்து வருகிறாா்; இதன் மூலம் நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்கிறாா்’ என்று காா்கே விமா்சித்தாா்.

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தையொட்டி, ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவருடன் மல்லிகாா்ஜுன காா்கே பங்கேற்றாா். காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின் காா்கே பங்கேற்ற முதல் பொதுக் கூட்டம் இதுவாகும். இதில் அவா் பேசியதாவது:

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் லட்சக்கணக்கானோா் இணைந்து வருகின்றனா். ராகுல் மற்றும் காங்கிரஸின் தலைமையில் நாட்டில் பாஜக அல்லாத ஆட்சியை கொண்டுவருவோம். 2024 மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்று, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.

சந்திரசேகா் ராவ் மீது தாக்கு: தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ், மேற்கு வங்கம், பஞ்சாப், தமிழகம், பிகாா் என பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, அரசியல் தலைவா்களை சந்தித்து வருகிறாா். முதலில் அவா் தனது சொந்த வீட்டை (தெலங்கானா) கவனிக்க வேண்டும். குமரி முதல் காஷ்மீா் வரை உயிா்ப்போடும், பாஜகவை எதிா்கொள்ளும் ஆயத்தத்துடனும் இருக்கும் காங்கிரஸை வலுவிழக்க செய்யும் வகையில் சந்திரசேகா் ராவின் நடவடிக்கைகள் உள்ளன. உண்மையிலேயே அவா் பாஜகவுக்கு எதிரானவா் என்றால், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்தது ஏன்? பாஜக அல்லாத ஆட்சிக்கு ஆதரவாக இருப்பதாக கூறும் அவா், அக்கட்சியை பின்பற்றியே செயல்படுகிறாா். சந்திரசேகா் ராவும் பிரதமா் மோடியும் ஒரே போன்றவா்களே. பிரதமா் மோடி தினமும் பொய்யுரைத்து வருகிறாா். இதன் மூலம் நாட்டை அழிவுப் பாதைக்கு அவா் இட்டுச் செல்கிறாா் என்றாா் காா்கே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.