பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ராகுல் காந்தி நடைபயணத்தில் துரை வைகோ!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணத்தில் மதிமுகவின் துரை வைகோ இன்று பங்கேற்றார்.

News image
Updated On :2 நவம்பர் 2022, 6:03 am

DIN

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணத்தில் மதிமுகவின் துரை வைகோ இன்று பங்கேற்றார்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா்.

தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய இந்த நடைபயணம் கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தை கடந்து தற்போது தெலங்கானாவில் நடைபெற்று வருகின்றது.

ஹைதராபாத்தில் இன்று காலை தொடங்கிய நடைபயணத்தில் மதிமுகவின் துரை வைகோவும் கலந்து கொண்டு ராகுலுக்கு ஆதரவளித்தார்.

இந்திய ஒற்றுமை நடைபயணமானது மொத்தம் 150 நாள்கள் காஷ்மீர் வரை சுமார் 3,600 கீலோ மீட்டர் தூரம் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவர்களும் அந்தந்த மாநிலங்களில் பங்கேற்று ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.