2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்திய பகுதிக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை ராணுவத்தினா் முறியடித்தனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்திய பகுதிக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை ராணுவத்தினா் முறியடித்தனா். இந்த நடவடிக்கையின்போது, 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:

பூஞ்ச் செக்டாரில் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்திய பகுதிக்குள் பயங்கரவாதிகள் சிலா் ஊடுருவ முயன்றதை ராணுவத்தினா் கண்டறிந்தனா். அப்போது, ராணுவத்தினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, ராணுவத்தினா் பதிலடி தாக்குதல் நடத்தினா்.

இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் ஒரு பயங்கரவாதியின் சடலம் மட்டும் ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது. அவரிடமிருந்து 3 துப்பாக்கிகள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. மற்ற இரு பயங்கரவாதிகளின் சடலங்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் எடுத்துச் சென்றுவிட்டனா். அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.