47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

'நான் தவறு செய்திருந்தால் என்னைக் கைது செய்யுங்கள்' - ஜார்கண்ட் முதல்வர் பேச்சு

நான் குற்றம் செய்திருந்தால் என்னை கைது செய்யுங்கள் என அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த சோரன் சவால் விடுத்துள்ளார். 

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:38 am

DIN

நான் குற்றம் செய்திருந்தால் என்னை கைது செய்யுங்கள் என அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த சோரன் சவால் விடுத்துள்ளார். 

நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த சோரன் இன்று(வியாழக்கிழமை) நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று ஆஜராகவில்லை, மாறாக சத்தீஸ்கரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டார். 

விழாவில் இதுகுறித்துப் பேசியுள்ள ஹேமந்த் சோரன், 'அமலாக்கத்துறை இன்று எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், ஏற்கெனவே இந்த விழாவுக்கு வர நான் திட்டமிட்டிருந்தேன். நான் உண்மையில் குற்றம் செய்திருந்தால் வந்து என்னைக் கைது செய்யுங்கள். ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்? அமலாக்கத் துறை அலுவலகம் முன்பாக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மக்களுக்கு ஏன் பயப்படுகிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கிழக்கு மாநிலங்கள் ஜார்கண்ட் மக்களால் மட்டுமே ஆட்சி செய்யப்படும், வெளி மாநிலத்தவர்கள் இங்கு ஆட்சி செய்ய முடியாது, வரும் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக படுதோல்வியை சந்திக்கும் என்று கூறினார்.

முன்னதாக, ஜாா்க்கண்ட் தலைநகா் முதல்வா் ஹேமந்த் சோரன் மீது ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான ரகுபா்தாஸ் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து அதுதொடா்பான ஆவணங்களையும் வெளியிட்டிருந்தாா்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஹேமந்தை தகுதி நீக்கம் செய்யக் கோரி ஜார்கண்ட் ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. இதற்கிடையே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வந்த ஹேமந்த் அதில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.