47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மோர்பி விபத்து பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம்: ஒவைஸி குற்றச்சாட்டு

குஜராத்தில் நடந்த விபத்து பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :3 நவம்பர் 2022, 9:49 am

DIN

குஜராத்தில் நடந்த விபத்து பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்துள்ளார். 

குஜராத் தொங்கு பாலம் விபத்து குறித்துப் பேசிய ஒவைஸி, 'மோர்பியில் நடந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. இது குஜராத்தில் பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம்' என்று கூறினார். 

மேலும், 'குஜராத்தில் பாஜகவின் தவறான ஆட்சியால், கரோனா காலத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். அங்கு பணவீக்கம் உள்ளது, வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு குரல் கொடுக்கவும் தலைமையை உருவாக்கவும் நாங்கள் முயற்சித்து வருகிறோம். குஜராத் தேர்தலில் இந்த பிரச்னைகளை நாங்கள் எழுப்புவோம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, குஜராத் மாநிலம் மோா்பியில் உள்ள மச்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 135 போ் உயிரிழந்தனா். 100 பேர் காயமடைந்தனர். 

காணாமல் போன இருவரின் உடல் கடந்த இரு நாள்களாக தேடப்பட்டு வந்த நிலையில் அனைவரது உடல்களும் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.