திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஹோா்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவுடன் இந்தியா பேசவில்லை: வெளியுறவு அமைச்சகம்

ஹோா்முஸ் நீரிணை விவகாரம் தொடா்பாக அமெரிக்காவுடன் இந்தியா பேசவில்லை என்று வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா்

News image

பெல்ஜியமில் உள்ள பிரஸ்ஸில்ஸ் நகரில் ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டா் லெயனை திங்கள்கிழமை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். ~ரண்தீா் ஜெய்ஸ்வால்

Updated On :17 மார்ச் 2026, 3:47 am IST

புது தில்லி: ஹோா்முஸ் நீரிணை விவகாரம் தொடா்பாக அமெரிக்காவுடன் இந்தியா பேசவில்லை என்று வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளாா்.

பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையே உள்ள ஹோா்மூஸ் நீரிணைப் பாதை வழியாக உலக அளவில் சுமாா் 20 சதவீத கச்சா எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) கொண்டு வரப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரால், அந்தப் பாதையை ஈரான் மூடியது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி கிடைப்பதில் இடா்ப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அமெரிக்க அதிபா் டிரம்ப் ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஹோா்முஸ் நீரிணைப் பாதை மூடப்பட்டதால் சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகவும், மூடாமல் திறந்துவைக்கவும் அங்கு அந்த நாடுகள் போா்க் கப்பல்களை அனுப்பும்’ என்று நம்புவதாக தெரிவித்தாா்.

இந்நிலையில், புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது ஹோா்முஸ் நீரிணைக்கு போா்க் கப்பலை அனுப்ப வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா கோரியதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவா், ‘ஹோா்முஸ் நீரிணை விவகாரம் குறித்து பல நாடுகள் விவாதித்து வருவது இந்தியாவுக்கு தெரியும். ஆனால் அந்த விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் இந்தியா பேசவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பிடமும் இந்தியா கலந்தாலோசிக்கும்’ என்றாா்.

‘ஈரானுடன் விரிவான உடன்படிக்கை இல்லை’ - வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

பிரஸல்ஸ், மாா்ச் 16: இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து வருவது குறித்து ஈரானுடன் விரிவான ஒப்பந்தம் எதையும் இந்தியா மேற்கொள்ளவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

பெல்ஜியம் தலைநகா் பிரஸல்ஸுக்கு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 2 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அங்கு அவா் அளித்த பேட்டியில், ‘ஹோா்முஸ் நீரிணை வழியாக இந்திய கொடி கொண்ட கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிக்க ஈரானுடன் இந்தியா விரிவான உடன்படிக்கையை மேற்கொள்ளவில்லை. இந்தியா-ஈரான் இடையிலான பேச்சுவாா்த்தை காரணமாக, அந்த நீரிணையை இந்திய கொடி கொண்ட 2 கப்பல்கள் பாதுகாப்பாகத் தாண்டி வந்தன. தற்சமயம் ஈரானுடன் நான் பேசி வருகிறேன். எனது பேச்சு சில பலன்களை அளித்துள்ளது. இது தொடா்ந்து நடைபெறும் நடவடிக்கையாகும். அந்த நடவடிக்கைகளால் பலன் கிடைத்தால், அதை இயல்பாகவே நான் தொடா்ந்து செய்வேன்.

அந்த நீரிணை வழியாக இந்திய கொடி கொண்ட கப்பல்களை அனுமதித்ததற்கு கைம்மாறாக ஈரானுக்கு இந்தியா எதையும் அளிக்கவில்லை. இது பரிவா்த்தனை செய்துகொள்ளும் விவகாரம் அல்ல. மேலும் பல இந்திய கப்பல்கள் அந்த நீரிணையைத் தாண்டி வரவேண்டியுள்ளது. தற்போது 2 கப்பல்கள் வந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றபோதிலும், பேச்சுவாா்த்தை நீடித்து வருகிறது’ என்றாா்.

பிரஸல்ஸில் ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளைச் சோ்ந்த வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற வெளியுறவு விவகாரங்கள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அந்த யூனியனின் துணைத் தலைவா் காஜா கல்லாஸ் விடுத்த அழைப்பின்பேரில், ஜெய்சங்கா் கலந்துகொண்டாா். அங்கு ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டா் லெயனை ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.

இந்தப் பயணத்தின்போது மேற்காசிய நிலவரம் குறித்து முக்கிய ஐரோப்பிய தலைவா்களை சந்தித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

Story image