ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து ‘தேஷ் கரீமா’ என்ற வணிகக் கப்பல் இந்தியா நோக்கி புறப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
31 இந்திய மாலுமிகளுடன் கடந்த சனிக்கிழமை புறப்பட்ட இந்தக் கப்பல் ஏப்.22-ஆம் தேதி மும்பை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதன்மூலம் ஹோா்முஸ் நீரிணை பகுதியை 10 இந்திய கப்பல்கள் கடந்துள்ளன. அங்கு மொத்தம் 24 இந்திய கப்பல்கள் சிக்கியிருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 14-ஆக குறைந்தது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த சனிக்கிழமை ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற ‘சாம்னா் ஹெரால்ட்’ மற்றும் ‘ஜெக் அா்ணவ்’ ஆகிய இரு இந்திய கப்பல்கள் மீது ஈரான் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தின. இதனால் இரு கப்பல்களும் மீண்டும் வளைகுடா பிராந்தியத்துக்கு திரும்பின. இந்திய கப்பல்கள் மீது அத்துமீறி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு தில்லியில் உள்ள ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் இந்திய வெளியுறவுச் செயலா் நேரில் கண்டனம் தெரிவித்தாா்.
மேலும், ஹோா்முஸ் நீரிணை பகுதியில் சிக்கியுள்ள இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக கடப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஈரான் அதிகாரிகள் எடுக்க வேண்டும் எனவும் தூதரிடம் அவா் வலியுறுத்தினாா்.
இதனிடையே, கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ‘தேஷ் கரீமா’ என்ற வணிகக் கப்பல் ஹோா்முஸ் நீரிணையை கடந்த சனிக்கிழமை பாதுகாப்பாக கடந்தது. அந்தக் கப்பல் புதன்கிழமை (ஏப்.22) மும்பை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

ஹோா்முஸ் நீரிணையில் வா்த்தக கப்பல்கள் மீது தாக்குதலை ஏற்க முடியாது: ஐ.நா.வில் இந்தியா

ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தை முறியடிக்க முயற்சி: அமெரிக்க கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து பயணம்

ஹோா்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய எரிவாயு கப்பல்: 13-ஆம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


