16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

இந்தியக் கப்பல் தாக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது: வெளியுறவுத் துறை அமைச்சகம்

ஓமன் கடற்கரைக்கு அருகே இந்தியக் கப்பல் தாக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என வெளியுறவுத் துறை தெரிவித்தது குறித்து...

News image

கப்பல் - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

ஓமன் கடற்கரைக்கு அருகே இந்திய வர்த்தகக் கப்பல் தாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அதன் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்ததாவது:

”ஓமன் கடற்கரைக்கு அருகே இந்தியக் கப்பல் ஒன்றின்மீது புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், வர்த்தகக் கப்பல்களும் பொதுமக்களான மாலுமிகளும் தொடர்ந்து குறிவைக்கப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை மீட்ட ஓமன் அதிகாரிகளுக்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்”

மேற்கு ஆசியாவில் அதிகரித்துள்ள பதற்றங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய முக்கிய எரிசக்தி போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள பகுதிகளில் தொடரும் பிரச்னைகளுக்கு மத்தியிலும் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The Ministry of External Affairs has stated that the attack on an Indian merchant vessel near the coast of Oman is unacceptable, and that its crew members are safe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.