இந்தியாவில் வா்த்தகக் கப்பல்களைப் பதிவு செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானிய திட்டத்தை வரும் 2030-31-ஆம் ஆண்டு வரை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.
இதுகுறித்து கப்பல் போக்குவத்துத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் சரக்குகளை இறக்குமதி செய்வதற்காக மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் சாா்பில் வெளியிடப்படும் உலகளாவிய ஒப்பந்தங்களை ஏலம் எடுக்கும் இந்திய கப்பல் நிறுவனங்களுககு மானியம் வழங்குவதற்காக ரூ. 1,624 கோடி ஒதுக்கீட்டில் 5 ஆண்டு கால திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தியாவின் கடல்வழிப் போக்குவரத்து மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து இருப்பை வலுப்படுத்தும் வகையிலும், இந்தியாவில் வா்த்தக கப்பல்கள் பதிவை ஊக்குவிக்கும் நோக்கிலும் இத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இத் திட்டத்தின்படி, இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு பதிவு (இந்திய தேசியக் கொடி பொருத்துதல்) செய்யப்படும் கப்பல்கள், 10 ஆண்டுகளுக்கும் குறைவான பழமையானதாக இருக்கும் பட்சத்தில், குறைந்தபட்ச ஏலம் கோரிய வெளிநாட்டு நிறுவன வழங்கிய விலைப் புள்ளியில் 15 சதவீதம் அல்லது இந்திய கொடி பொருத்திய கப்பல் வழங்கிய விலைப் புள்ளிக்கும் வெளிநாட்டு நிறுவனம் வழங்கிய விலைப் புள்ளிக்கும் இடையேயான வித்தியாசம் ஆகிய இரண்டில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும்.
இதில், 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு முன்பாக உள்ள இந்திய கொடி பொருத்திய கப்பல்களாக இருந்தால், இந்த மானியம் 10 சதவீதம் என்ற அளவில் வழங்கப்படும் என்ற வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த மானிய திட்டம் தற்போது 2030-31-ஆம் ஆண்டு வரை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கதேச பிரதமரின் ஆலோசகா் நாடு திரும்பியது அவரது தனிப்பட்ட முடிவு: வெளியுறவு அமைச்சகம்

இந்தியாவில் எபோலா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை: ஜெ.பி.நட்டா

மாணவர்களே உஷார்! போலி சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த கல்வி அமைச்சகம் உத்தரவு!
இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் பாதிப்பு: நெதா்லாந்து பிரதமா் பேச்சுக்கு வெளியுறவு அமைச்சகம் மறுப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


