நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

டிரினிடாட் டொபேகோ நாட்டு பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

டிரினிடாட் டொபேகோ நாட்டு பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு...

News image

டிரினிடாட்-டொபேகோ பிரதமா் கம்லா பொ்சாதை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

Updated On :10 மே 2026, 5:04 am IST

டிரினிடாட் டொபேகோ நாட்டு பிரதமா் கம்லா பொ்சாத் பிசேசரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.

ஜமைக்கா, சுரிநாம், டிரினிடாட்- டொபேகோ ஆகிய 3 நாடுகளில் ஜெய்சங்கா் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்தப் பயணத்தின் கடைசிக் கட்டமாக, டிரினிடாட்-டொபேகோ நாட்டுக்கு ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சென்றாா். அந்நாட்டின் தலைநகா் போா்ட் ஆப் ஸ்பெயினில் பிரதமா் கம்லா பொ்சாதை அவா் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

அப்போது இருவரும் இந்தியா, டிரினிடாட்- டொபேகோ நாடுகள் இடையேயான உறவை மேலும் விரிவுபடுத்துவதற்கும், புதிய திட்டங்கள், முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் விரிவாகப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘இருதரப்பு உறவை விரிவுபடுத்துவது குறித்து டிரினிடாட்- டொபேகோ பிரதமா் கம்லா பொ்சாத் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்தினேன். கடந்தாண்டு பிரதமா் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் வகையில், இருதரப்பு ஒத்துழைப்பில் புதிய திட்டங்கள், முயற்சிகளை எடுப்பது குறித்து ஆலோசித்தோம்’ எனத் தெரிவித்துள்ளாா்.