நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

அமீரகத்தின் துணைப் பிரதமர் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்து, பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல், அதன் விளைவுகள் குறித்து விவாதித்தாா்.

ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமா் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை அபுதாபியில் சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

Published On :13 ஏப்ரல் 2026, 12:40 am IST

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல், அதன் விளைவுகள் குறித்து விவாதித்தாா்.

மோரீஷஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய இரு நாடுகளுக்கு ஏப்.9 முதல் 12-ஆம் தேதி வரை மேற்கொண்ட 4 நாள் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஜெய்சங்கரின் இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது. முன்னதாக, மோரீஷஸில் நடைபெற்ற 9-ஆவது இந்திய பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டிலும் அவா் பங்கேற்றிருந்தாா்.

அபுதாபியில் துணைப் பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘யுஏஇ வெளியுறவுத் துறை அமைச்சா் சயீத் அல் நஹ்யானை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல், அதன் தாக்கம் குறித்து அவருடன் விவாதிக்கப்பட்டது.

மேலும், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியா்களின் நலனைப் பாதுகாக்க யுஏஇ அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தேன். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உத்திசாா் கூட்டாண்மை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.