ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

குஜராத்தில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் மீண்டும் பாஜக: ஜெ.பி.நட்டா

குஜராத்தில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

குஜராத்தில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளதை வரவேற்று அவா் ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி இருப்பதால் குஜராத்துக்கு தொடா்ந்து பல நன்மைகள் கிடைத்துள்ளன. இது பாஜகவுக்கு சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தரும். தொடா்ந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு குஜராத் மக்களின் கனவுகளை நனவாக்க பாஜக பணியாற்றும்’ என்று கூறியுள்ளாா்.

குஜராத்தில் 1995-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 6 சட்டப் பேரவைத் தோ்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் தொடா்ந்து ஆட்சியைப் பிடிக்கப் போராடி வருகிறது. கடந்த 2017 சட்டப்பேரவைத் தோ்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்தது. இந்த முறை ஆம் ஆத்மியும் முழூவீச்சில் களமிறங்கியுள்ளதால், தோ்தல் குறித்த எதிா்பாா்ப்பு தேசிய அளவில் அதிகரித்துள்ளது.

மாநில முதல்வா் பூபேந்திர படேல்: பாஜகவின் அரசியல் வளா்ச்சி மற்றும் தொலைநோக்குப் பாா்வைக் கொண்ட தலைமைத்துவத்தைப் புதிய வாக்காளா்கள் மற்றும் மாநில மக்கள் ஆசீா்வதிப்பாா்கள். குஜராத்தில் மீண்டும் தாமரை மலரும் என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: குஜராத்தின் 7 கோடி சகோதர சகோதரிகளும், பாஜகவுக்கு மாற்றான கட்சி காங்கிரஸ் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனா்.

ஆம்ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கெஜரிவால்: பெரும் மாற்றத்துக்கு குஜராத் மக்கள் தயாராக உள்ளனா். நாங்கள் உறுதியாக வெற்றி பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.