இடைத்தேர்தல்: 6 மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது

6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இடைத்தேர்தல்: 6 மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது

6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அந்தேரி கிழக்கு(மகாராஷ்டிரம்), மோகமா, கோபால்கஞ்ச் (பிகார்), ஆதம்பூர் (ஹரியானா), முனுகோட் (தெலங்கானா), கோலா கோக்ரநாத்(உ.பி.), தாம்நகர்(ஒடிசா) ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் நவம்பர் 6ஆம் தேதி வாக்கெண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதில், தெலங்கானாவின் முனுகோட் மற்றும் மகாராஷ்டிரத்தின் அந்தேரி கிழக்கு தொகுதிகளை கைப்பற்றி தங்களது பலத்தை நிரூபிக்க அரசியல் கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com