சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பயணிகள் வாகன விலையை உயர்த்துகிறது டாடா மோட்டார்ஸ்

வாகனத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது பயணிகள் வாகன விலையை நவம்பர் 7ஆம் தேதி முதல் உயர்த்துவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.

News image
பயணிகள் வாகன விலையை உயர்த்துகிறது டாடா மோட்டார்ஸ்
Updated On :5 நவம்பர் 2022, 7:57 am

DIN


வாகனத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது பயணிகள் வாகன விலையை நவம்பர் 7ஆம் தேதி முதல் உயர்த்துவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இந்த விலை உயர்வானது, பயணிகள் வாகன விலையில் 0.9 சதவீதம் என்ற அளவில் இருக்கலாம் என்றும், கார்களின் மாடல்களைப் பொறுத்து அது மாறுபடும் என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அதிகரித்திருக்கும் உள்ளீட்டுச் செலவினங்களை  இந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஒட்டுமொத்த உற்பத்திச் செலவும் கடுமையாக அதிகரித்திருப்பதால், இந்த குறைந்தபட்ச விலை உயர்வு எனும் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ, பஞ்ச், நெக்ஸான், ஹாரியெர், சஃபாரி உள்ளிட்ட கார் மாடல்களை நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.