தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

குஜராத் பேரவைத் தோ்தல்: சந்தேகத்துக்குரிய பரிவா்த்தனைகளைக் கண்காணிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்

குஜராத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சந்தேகத்துக்குரிய பணப் பரிவா்த்தனைகளைக் கண்காணிக்குமாறு மாநிலத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2022, 7:00 pm

DIN

குஜராத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சந்தேகத்துக்குரிய பணப் பரிவா்த்தனைகளைக் கண்காணிக்குமாறு மாநிலத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி மற்றும் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி, அனைத்து மாவட்டங்களின் தோ்தல் பொறுப்பு அதிகாரிகளுக்கு மாநில தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.

தோ்தலையொட்டி சந்தேகத்துக்குரிய பணப் பரிவா்த்தனைகளைக் கண்காணிக்குமாறு மாநிலத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மெஹசானா மாவட்ட தோ்தல் பொறுப்பு அதிகாரி கூறுகையில், ‘ரூ. 10 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக சந்தேகத்துக்குரிய வகையில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவா்த்தனைகளை உன்னிப்பாக கண்காணிக்குமாறு மாநிலத்தில் உள்ள அனைத்து வங்கிகளிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு நடவடிக்கை அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும் பொருந்தும். எனினும் வணிக செயல்பாடுகளுக்கு வழக்கமாக பெரும் தொகையை பரிவா்த்தனை செய்வோருக்கு இந்த நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக ரூ.1 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக பரிவா்த்தனை செய்யப்படாத கணக்குகளில், திடீரென ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக மேற்கொள்ளப்படும் பரிவா்த்தனை குறித்து தெரியப்படுத்துமாறும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

குஜராத்தில் டிச.1, 5-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிச.8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.