கோப்புப் படம்
கோப்புப் படம்

நமீபியாவிலிருந்து வந்த சிறுத்தைப்புலிகளில் ஒன்று வேட்டையைத் தொடங்கியது

தேசிய உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட இரண்டு ஆண் சிறுத்தைப் புலிகளில் ஒன்று, தனது முதல் வேட்டையைத் தொடங்கியதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


ஷியோபூர்: நமீபியாவிலிருந்து மத்தியப் பிரதேச மாநிலம் குனோ - பல்பூர் தேசிய உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட இரண்டு ஆண் சிறுத்தைப் புலிகளில் ஒன்று, தனது முதல் வேட்டையைத் தொடங்கியதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை சிறிய கூண்டு போன்ற அமைப்பில் பராமரிக்கப்பட்டு வந்த சிறுத்தைப் புலிகள் மிகப்பெரிய வனப்பரப்புக்குள் திறந்துவிடப்பட்ட 24 மணி நேரத்தில், புள்ளி மான் ஒன்றை வேட்டையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வந்து ஒன்றரை மாத காலம் ஆகும் நிலையில், சிறுத்தைப் புலி ஒன்று முதல் முறையாக தனது இரையை வேட்டையாடியுள்ளது.  ஃபிரெட்டி - எல்டான் எனும் ஒரு ஜோடி சிறுத்தைப் புலிகள் முதல் கட்டமாக மிகப்பெரிய வனப்பரப்புக்குள் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி. அன்றைய தினம் நடைபெற்ற விழாவில், தேசிய பூங்காவில், சிறுத்தைப் புலிகள் ஒப்படைக்கப்பட்டன. 

நமீபியாவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட 6 சிறுத்தைப் புலிகளுக்காக மத்திய பிரதேசத்தின் குனோ-பல்பூா் தேசிய பூங்காவில் 10 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் சிறப்புப் பகுதி ஏற்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com