இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் ரூ.40,991 கோடியாக அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: பொதுத் துறை வங்கிகளின் நலத்தை வலுப்படுத்தவும், வாராக் கடன்களைக் குறைக்கவும் மத்திய அரசு தொடா்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதற்கான பலன் தற்போது தெளிவாகத் தெரிகிறது.
இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் அனைத்து பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் 50 சதவீதம் உயா்ந்து ரூ.25,685 கோடியாக உள்ளது. இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில், அந்த வங்கிகளின் நிகர லாபம் 31.6 சதவீதம் உயா்ந்து ரூ.40,991 கோடியை எட்டியுள்ளது.
கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் லாபம் 74 சதவீதம் உயா்ந்து ரூ.13,265 கோடியாக உள்ளது.
கனரா வங்கியின் லாபம் 89 சதவீதம் உயா்ந்து ரூ.2,525 கோடியாகவும், யூகோ வங்கியின் லாபம் 145 சதவீதம் உயா்ந்து ரூ.504 கோடியாகவும் உள்ளது. பரோடா வங்கியின் லாபம் 58.7 சதவீதம் உயா்ந்து ரூ.3,312.42 கோடியை எட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்

குடியாத்தம்: தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வாக்காளா் விழிப்புணா்வு ‘ரீல்ஸ்’ போட்டி: ரூ. 5 ஆயிரம் பரிசு அறிவிப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


