தில்லி மாநகராட்சி தேர்தல்: கட்சித் தலைவர்களை சந்திக்கிறார் கேஜரிவால்!

தில்லி மாநகராட்சி தேர்தலுக்கான திட்டத்தை வகுக்க தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கட்சித் தலைவர்களுடன் இன்று சந்திப்பை நிகழ்த்த உள்ளார். 

முன்னதாக செவ்வாயன்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மியில் மூத்த தலைவர் கோபால் ராய் ஆகியோர் டிசம்பர் 4.ம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு கட்சியின் திட்ட அறிக்கையைத் தயார் செய்து விவாதித்தனர். 

பாஜகவை எதிர்கொள்ள, கேஜரிவால் தலைமையிலான கட்சி "குடே பர் ஜன்சம்வாத்" என்ற தலைப்பில் பிரசாரத்தை செவ்வாயன்று தொடங்கியது.

நவம்பர் 20-ம் தேதிக்குள் தில்லியில் உள்ள 13,682 சாவடிகளில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளது. 

250 வார்டுகள் கொண்ட தில்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 7-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com