
ராகுலின் ஒற்றுமை நடைப்பயணத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வருகிற நவம்பர் 11 ஆம் தேதி கலந்துகொள்ளவிருக்கிறார்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ஒற்றுமை நடைப் பயணத்தை(பாரத் ஜோடோ) காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானாவைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடைப்பயணத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் நடைபெறும் ஒற்றுமை நடைப்பயணத்தில் நாளை மறுநாள்(நவ. 11) தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனை கட்சியின் ஆதித்ய தாக்கரே கலந்துகொள்ளவிருப்பதாக மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளை(நவ. 10) தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் பட்டீல், சுப்ரியா சுலே ஆகியோர் கலந்துகொள்வதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் நிா்வாகி உயிரிழப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.