தில்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
தலைநகர் தில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு கடந்த நவம்பர் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தொடக்கப்பள்ளிகள் மட்டும் இன்று திறக்கப்படும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய் கடந்த திங்கள்கிழமை அறிவித்தார்.
அதன்படி, இன்று தில்லியில் 1 முதல் 5 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
கடந்த வாரம் தில்லியில் காற்று மாசு 'கடுமை' பிரிவில் இருந்தது. தற்போது 'மிகவும் மோசம்' பிரிவில் (காற்றின் தரம் 329 புள்ளிகள்) உள்ளது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் காற்று மாசு காரணமாக குழந்தைகள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது பள்ளி திறந்ததால், குழந்தைகள் காற்று மாசினால் பாதிக்காத வண்ணம், போதுமான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

