'நாங்க சிங்கிள் பசங்க'னு பாடுபவர்களா நீங்கள்? இது உங்களுக்கான நாள்

சிங்கிள் டே.. நவம்பர் 11ஆம் தேதி (11-11என்று வருவதாலா?) ஆண்டுதோறும் சர்வதேச சிங்கிள் டே கொண்டாடப்பட்டு வருகிறதாம்.
'நாங்க சிங்கிள் பசங்க'னு பாடுபவர்களா நீங்கள்? இது உங்களுக்கான நாள்
'நாங்க சிங்கிள் பசங்க'னு பாடுபவர்களா நீங்கள்? இது உங்களுக்கான நாள்

பொதுவாக சிங்கிளாக இருக்கும் இளசுகள், ஜோடிகளாகத் திரிபவர்களைப் பார்த்து ஏங்குவதும், ஜோடிகளாகத் திரிபவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் சிங்கிளாக நண்பர்களுடன் சுற்றுபவர்களைப் பார்த்து ஏங்குவதும் பலருக்கும் தெரிந்த உண்மை நிலவரம்.

இங்கே ஜோடிகளாக சுற்றுபவர்கள் எல்லாம் வாயடைத்துப் போகும் வகையிலும், காதலர் தினங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது சிங்கிள் டே.. நவம்பர் 11ஆம் தேதி (11-11என்று வருவதாலா?) ஆண்டுதோறும் சர்வதேச சிங்கிள் டே கொண்டாடப்பட்டு வருகிறதாம்.

மிகச் சிறந்த நண்பராகவும், உற்ற துணையாகவும் இருக்கும் நமக்கு நாமே பரிசளித்துக் கொள்ளவும், நம்மை நாம் புரிந்து கொள்ளவும் நம்மை புதுப்பித்துக் கொள்ளவும் கூட இந்த நாளை கொண்டாடலாம். 

இந்த நாளில், சிங்கிளாக இருக்கும் இளசுகள் எல்லாம் ஒன்றிணைந்து விருந்து, கேளிக்கை என்று கொண்டாடி மகிழ்கிறார்கள். ஆரம்பத்தில் இது பேச்சுலர்கள் டே என்று கல்வி நிலையங்கள், நிறுவனங்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. பிறகு, திருமணமாகாத, காதலில் விழாத இளசுகள் கொண்டாடும் நிகழ்வாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் இந்த நாள் வேறு வேறு தேதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சீனாவில்தான் இந்த சிங்கிள் டே கொண்டாட தொடங்கியிருக்கிறார்கள்.

சரி.. சிங்கிள் டே அன்று என்னதான் செய்வார்கள்?

காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசளிப்பது போல, சிங்கிள் தினத்தன்று உங்களை நீங்களே காதலிக்கத் தொடங்குங்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெகு நாள்களாக வாங்க ஆசைப்பட்டுக் கொண்டிருந்த பொருள்களை வாங்கி உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளலாம் என்று ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் விளம்பரங்களை செய்து வருகின்றன.

உங்கள் நண்பர்கள் வட்டத்தில் இன்னமும் உங்களைப் போன்றே சிங்களாக இருப்பவர்களை அன்றைய தினம் சந்தித்து மகிழலாம்.

எதற்காக இந்த சிங்கிள் டே

நாம் எப்போதுமே சிங்களாக இருக்கிறோமே என்று வருத்தப்படுவர்களை மகிழ்விக்கவும், இன்னமும் சிங்கிளாக இருக்கிறோம் என்று பெருமைப்பட வைக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது.

சிறப்பம்சம்

இந்த நாளின் முக்கியத்துவம் என்னவென்றால் மகிழ்ச்சி. ஆம், நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் நாள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com