என் மனைவிக்கு வாக்களியுங்கள்: ஜாம்நகர் தொகுதி மக்களிடம் ஜடேஜா வேண்டுகோள்
ஜாம்நகர் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கும் தனது மனைவிக்கு வாக்களிக்குமாறு அத்தொகுதி மக்களிடம் பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆதரவு கோரியுள்ளார்.


ஜாம்நகர் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கும் தனது மனைவிக்கு வாக்களிக்குமாறு அத்தொகுதி மக்களிடம் பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆதரவு கோரியுள்ளார்.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால் இத்தோ்தல் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத்தில் தொடா்ந்து 7-ஆவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைக்கும் முனைப்புடன் பாஜக களமிறங்கியுள்ளது.
அக்கட்சி சாா்பில் போட்டியிடும் 166 வேட்பாளா்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளனா். அதில், பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபாவை ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக களமிறக்கியுள்ளது. இந்த நிலையில் ஜாம்நகர் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கும் தனது மனைவிக்கு வாக்களிக்குமாறு அத்தொகுதி மக்களிடம் பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆதரவு கோரியுள்ளார்.
இதையும் படிக்க- எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், குஜராத் தேர்தல் வந்துவிட்டது, இது டி20 போட்டி போல் உள்ளது. என் மனைவி பாஜக வேட்பாளராக அரசியலில் அறிமுகமாகிறார். நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். ஜாம்நகர் மக்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு அளிக்க திரளாக வருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...