உருவ கேலிக்கு எதிராக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அதனை பாடமாக சேர்ப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி முகநூல் பதிவில், தனது புகைப்படத்தைப் பார்த்த ஒருவர் தொப்பையைக் குறைக்குமாறு கூறியதற்கு, உருவ கேலி செய்வது கேவலமான செயல் என்று அவருக்கு பதில் அளித்ததாகத் தெரிவித்தார்.
மேலும், 'என்ன விளக்கம் கொடுத்தாலும் உருவ கேலி என்பது மிக மோசமானது. அன்பாகக் கூறுவது போல சொல்லிவிடுகிறார்கள். இது நம் சமூகத்தில் பல நிலைகளில் நடக்கிறது. பலரும் இந்த கொடுமைக்கு ஆளாகிறார்கள்' என்றும் தெரிவித்தார்.
அதுபோல, பள்ளி மாணவரான தனது நண்பரின் சகோதரர் ஒருவர், தனது நிறத்தால் பாகுபாடுகளை எதிர்கொள்ள வேண்டிய அனுபவத்தையும் அமைச்சர் பகிர்ந்து கொண்டார். அந்த சிறுவன் ஆசிரியர்களிடம் புகார் அளித்ததால் மற்ற மாணவர்களின் துன்புறுத்தலால் பள்ளியை மாற்ற வேண்டிய அளவுக்கு சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறினார்.
இதையும் படிக்க | 2022 டூடுல் போட்டியில் வென்ற கொல்கத்தா சிறுவன்! கௌரவித்த கூகுள்!
இதையடுத்து, கேரள அரசு உருவ கேலிக்கு எதிரான விழிப்புணர்வை பள்ளிகளில் ஏற்படுத்தத் திட்டமிட்டு அதனை படத்தின் ஒரு பகுதியாக சேர்ப்பது பற்றி பரிசீலிக்கும் என அமைச்சர் சிவன்குட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
உருவ கேலி செய்வதை நிறுத்தி அனைவரும் நவீன மனிதர்களாக இருப்போம், ஒருவரின் உருவத்தைப் பார்க்காமல் மனதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்

தங்கம் - வெள்ளி: இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

