இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தமிழகத்தில் நவ. 21, 22 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நவம்பர் 21, 22 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :18 நவம்பர் 2022, 5:43 am

DIN

தமிழகத்தில் நவம்பர் 21, 22 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழையை யொட்டி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இந்நிலையில் மேலும் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நாளை(நவ. 19) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்பதால் நவம்பர் 21, 22 தேதிகளில் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் எனவும் கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.