அவசரமாகத் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்? நீதிமன்றம் சரமாரி கேள்வி

மே 15 முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், அந்தகாலகட்டத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)


அவசர அவசரமாகத் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

மே 15 முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், அந்தகாலகட்டத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. 

தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் கொலீஜியம் போன்ற முறையை ஏற்படுத்தி சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்' என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசஃப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வழக்குரைஞரிடம் ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. 

புதிய தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று வழக்கு விசாரணையின்போது, அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

அப்போது 18ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில், அதே நாளில் புதிய தேர்தல் ஆணையர் பெயரை பிரதமர் அறிவிப்பதற்கான காரணம் என்ன என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மே 15 முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், அந்தகாலகட்டத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் எஅ கேள்வி எழுப்பிய நீதிபதி,

 அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? 4 அதிகாரிகளில் அருண் கோயலை தெரிவு செய்தது எப்படி என்பது குறித்து அரசு வழக்குரைஞர் விளக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com