12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மத்திய அரசுடன் சேர்ந்து மக்கள் சேவையாற்ற முடியாதா? பியூஷ் கோயல்

மத்திய அரசுடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றுவதில் ஆம் ஆத்மி கட்சி முழுமையாக தோல்வியடைந்துள்ளதாக மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். 

பியூஷ் கோயல் (கோப்புப் படம்)

Published On :


மத்திய அரசுடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றுவதில் ஆம் ஆத்மி கட்சி முழுமையாக தோல்வியடைந்துள்ளதாக மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். 

தில்லி மாநகராட்சி தேர்தலையொட்டி பேசிய அமைச்ச பியூஷ் கோயல், குடிசைப்பகுதி வாழ் மக்களின் மறுவாழ்வுக்கு ஆம் ஆத்மி கட்சி எதையுமே செய்யவில்லை. மாறாக மக்கள் வரிப்பணத்தில் ஊழல் மட்டுமே செய்துள்ளது. 

மத்திய அரசு மற்றும் தில்லி மாநகராட்சியுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு சேவையாற்றுவதில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. இதனால் தில்லி மாநகராட்சி தேர்தல் மூலம் ஆம் ஆத்மிக்கு பாடம் புகட்ட வேண்டும். மாநகராட்சி தேர்தல் நடைபெறும் டிசம்பர் 4ஆம் தேதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தாமரை மலர்வதற்கான ஆசிர்வாதங்களை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.