மல்லிகார்ஜுன கார்கேவால் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது: சசி தரூர் 

மல்லிகார்ஜுன கார்கேவால் காங்கிரஸ் கட்சிக்குள் எந்தவித மாற்றத்தையும்  கொண்டு வர முடியாது என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார். 
மல்லிகார்ஜுன கார்கேவால் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது: சசி தரூர் 

மல்லிகார்ஜுன கார்கேவால் காங்கிரஸ் கட்சிக்குள் எந்தவித மாற்றத்தையும்  கொண்டு வர முடியாது என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி செப். 30இல் முடிவடைந்தது. 

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்  வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதுபோல ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கே.என். திரிபாதி என்பவரும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். மேலும் மல்லிகார்ஜுன கார்கேவும் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். தற்போது இதுகுறித்து சசி தரூர் கூறியதாவது: 

நாங்கள் எதிரிகள் அல்ல, இது போரும் அல்ல. இது எங்கள் கட்சியின் எதிர்காலத்திற்கான கருத்துக்கணிப்பு. காங்கிரஸ் கட்சியின் முதல் 3 தலைவர்களில் கார்கேவும் உள்ளார். இவரைப் போன்ற தலைவர்களால் எந்தவித மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. இருக்கும் முறையைத்தான் தொடருவார்கள். கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாற்றத்தை நான் கொண்டு வருவேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com