
உத்திர பிரதேச மாநிலம் பதோஹியில் நேற்று (அக்.2) நடந்த துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகினர் மற்றும் 50-க்கும் மேற்ப்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை(அக்.3) மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் துர்கா பூஜை பந்தல் தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்ததுள்ளது.
இந்த தீ விபத்தில் 12 வயது சிறுவன், 10 வயது சிறுவன் மற்றும் 45 வயது பெண் ஆகியோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், 22-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி, வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: முலாயம் சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் பிரதமர்
தீ விபத்துக்கு குறைந்த மின்னழத்தம் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.