ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் ராகுல் வழிபாடு!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். 

News image
Updated On :3 அக்டோபர் 2022, 9:58 am

DIN

கர்நாடகத்தில் பாரத் ஜோடோ யாத்திரையின் மூன்றாவது நாளான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். 

ராகுல் காந்தி சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்றபோது அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர். 

Story image

கோயிலுக்குச் சென்ற பிறகு ராகுல் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

மத நல்லிணக்கம் இந்தியாவின் அமைதியான மற்றும் முற்போக்கான எதிர்காலத்தின் அடித்தளம் என்றார்.  

ராகுல் தனது 26வது நாள் யாத்திரையை இன்று தொடங்கியுள்ளார். மேலும் 10 நாள் தசரா கொண்டாட்டங்களுக்காக அலங்கரிக்கப்பட்ட நகரத்தின் தெருக்களில் நடந்தார்.

Story image

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழைக்கு மத்தியில் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார், மேலும் அவர் நனைந்த நிலையிலும் தனது உரையைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.