வைஷ்ணோ தேவி கோயிலில் வழிபாடு செய்தார் அமித் ஷா
ஜம்மு - காஷ்மீர் சென்றிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கத்ராவில் உள்ள வைஷ்ணோ தேவி கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தார்.


ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் சென்றிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கத்ராவில் உள்ள வைஷ்ணோ தேவி கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தார்.
கத்ராவுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த அமித் ஷாவுடன், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் உடன் இருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, குகைக் கோயிலுக்கு இவர் வருகை தருவது இதுவே முதல்முறையாகும்.
இவரது ஜம்மு -காஷ்மீர் பயணத்தில் வைஷ்ணோ தேவி கோயில் வழிபாடும், நவராத்திரியின் முக்கிய நிகழ்வான 9ஆம் நாள் விழாவும் ஒன்றாக வந்திருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.
கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, ரஜௌரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அமித் ஷா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...