8 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை தொடக்கம்
நாட்டில் உள்ள 8 முக்கிய நகரங்களில் இன்று (அக்டோபர் 6) ஏர்டெல் தனது 5ஜி சேவையை தொடங்கியுள்ளது.
இந்த 5ஜி சேவையை இன்று (அக்டோபர் 6) முதல் தில்லி, மும்பை,சென்னை,பெங்களூரு, ஹைதராபாத்,சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாராணசி ஆகிய 8 நகரங்களில் ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது. மேலும், இந்த புதிய 5ஜி சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைகளுக்கு செலுத்திய கட்டணத்தை செலுத்தியே பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆன்லைன் ரம்மி: பணத்தை இழந்த மாணவர் தற்கொலை!
இது குறித்து ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் கூறியதாவது: “ கடந்த 27 ஆண்டுகளில் இந்தியாவின் தொலைதொடர்பு புரட்சியில் ஏர்டெலின் பங்களிப்பு அளப்பரியது. இன்று (அக்டோபர் 6) அந்தப் புரட்சியில் மேலும் ஒரு அடி முன்னோக்கி நகர்ந்துள்ளோம். நாங்கள் எங்களது ஏர்டெல் நிறுவனத்தின் மூலம் வேகமான இணைய வசதியினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. எங்களுக்கு வாடிக்கையாளர்கள்தான் மிகவும் முக்கியம். அதனால், தற்போது ஏர்டெல் 4ஜி சிம் வைத்திருக்கும் பயனர்கள் தங்களது 5ஜி தொலைபேசியில் அந்த சிம் கார்டினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்றார்.
இதையும் படிக்க: ‘போர் என்பது..’ சர்ச்சையாகும் எலான் மஸ்க் கருத்து
இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: “ வாடிக்கையாளர்கள் தங்களது 4ஜி திட்டத்தின் விலையிலேயே 5ஜி சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். 5ஜி பயனாளர்கள் தங்களது டேட்டா வேகமாக குறைவது போல தோன்றினால் அவர்கள் 5ஜி தெரிவை 4ஜி என மாற்றிக் கொள்ளலாம். இதன்மூலம், 5ஜி இணைய சேவை என்பதை வேண்டும் பொழுது மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்றார்.