குஜராத்தின் பத்வா ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளானது.
குஜராத் தலைநகா் காந்தி நகரையும் மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையையும் இணைக்கும் வகையில் நாட்டின் 3-ஆவது ‘வந்தே பாரத்’ ரயில் சேவையைப் பிரதமா் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை (செப்.30) தொடக்கிவைத்தாா்.
இந்நிலையில் இந்த ரயில் இன்று காலை 11.15 மணியளவில் பத்வா மற்றும் மணிநகர் ரயில் நிலையத்திற்கு இடையே வந்தபோது விபத்துக்குள்ளானது.
ரயில் செல்லும் பாதையில் குறுக்கே வந்த மாடுகள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்ததாகவும் அதேநேரத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயில் என்ஜினை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, நவீன வசதிகள் கொண்ட ‘வந்தே பாரத்’ ரயிலை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. முக்கியமாக, வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் ஏற்கெனவே புது தில்லி-வாராணசி, புது தில்லி-ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி காத்ரா ஆகிய இரு வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு மீண்டும் கொலை மிரட்டல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

தஞ்சையில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

குஜராத் துறைமுகம் வரும் 22 கப்பல்கள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

