இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: “ நாங்கள் அண்டை மாநிலங்களின் பழையப் பேருந்துகளை தில்லிக்குள் இயக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளோம். எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளை இயக்க வேண்டாம் என அவர்களிம் தெரிவித்துள்ளோம். அதற்கு முக்கியக் காரணம் தில்லியில் பழைய வாகனங்களால் ஏற்படும் மாசினைக் குறைப்பதே ஆகும். அதேபோல மற்றொரு கோரிக்கையினையும் நாங்கள் முன்வைத்துள்ளோம். உரிய மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகனங்களும் தலைநகர் தில்லியில் இயக்கக்கூடாது என்பதாகும்.” என்றனர்.