நாசிக் சாலை விபத்தில் 11 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

மகாராஷ்டிரம் மாநிலம், நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் பேருந்து ஒன்று லாரி மோதி விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழந்த இரங்கல் 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரம் மாநிலம், நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் பேருந்து ஒன்று லாரி மோதி விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரத்தில் ஒளரங்காபாத் சாலையில் சனிக்கிழமை காலை 5.15 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று, லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்தது.  

இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த ஒரு குழந்தை உள்பட 11 பயணிகள் தீயில் சிக்கி பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நாசிக்கில் நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் குடுமபத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், 

"நாசிக்கில் நிகழ்ந்த கோர பேருந்து விபத்து குறித்து தகவல் அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும்  உள்ளூர் நிர்வாகம் செய்து வருகிறது".

"பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com