கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிகாரில் காவலர் பேருந்து - இருசக்கர வாகனம் மோதல்: மூவர் பலி

பிகார் காவலர் பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் பலியாகினர். 

News image
Updated On :12 அக்டோபர் 2022, 12:12 pm

பிகார் காவலர் பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் பலியாகினர். 

சரண் மாவட்டத்தின் ரெவெல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 531-ல் உள்ள தியோரியா கிராமத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

காவல்துறை பேருந்தின் அடியில் சிக்கிய இருசக்கர வாகனம் 2 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் எரிபொருள் டேங்க் வெடித்து சிதறியது. 

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் பஞ்சபிந்தா கிராமத்தைச் சேர்ந்த குந்தன் மஞ்சி(22), புல்புல் மஞ்சி(25) மற்றும் கிஷோர் மஞ்சி(24) என அடையாளம் காணப்பட்டனர். 

விபத்தில் சிக்கிய காவலர் பேருந்து, ஜெயபிரகாஷ் நாராயணின் 120வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர், அமித்ஷா, உ.பி.முதல்வர் யோகி ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பாதுகாப்புக்காகச் சென்றிருந்த காவல்துறை வாகனம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த சம்பவத்தில் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.