அவிநாசி: கிராமிய மின் பாதையை நகரிய மின்பாதையாக மாற்ற வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

கிராமத்தையும், தொழில் வளத்தையும் மேம்படுத்த கிராமிய மின் பாதையை நகரிய மின் பாதையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்வாரிய அலுவலகத்தில் மனு அளிக்க வந்த 3 ஊராட்சி பொதுமக்கள், தொழில் துறையினர், விசைத்தறியாளர்கள்.
மின்வாரிய அலுவலகத்தில் மனு அளிக்க வந்த 3 ஊராட்சி பொதுமக்கள், தொழில் துறையினர், விசைத்தறியாளர்கள்.

அவிநாசி: கிராமத்தையும், தொழில் வளத்தையும் மேம்படுத்த கிராமிய மின் பாதையை நகரிய மின் பாதையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவிநாசி மின்வாரிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் மூன்று ஊராட்சி பொதுமக்கள் விசைத்தறியாளர்கள், தொழில்துறையினர் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: 

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்திற்கு உள்பட்ட கருமாபாளையம், சின்னேரிபாளையம், செம்பியநல்லூர் ஆகிய 3 ஊராட்சி பகுதிகளை உள்ளடக்கியது செம்மாண்டம்பாளையம் மின்பாதை. இப்பகுதிகளில் பனியன் உற்பத்தி, காடா உற்பத்தி, எம்ராய்டரி, புண்ணாக்கு ஆலை, மர அறுவை ஆலை, அரிசி ஆலை மற்றும் சிறு தொழில்கள் என பல்வேறு மின் இணைப்புகள் உள்ளன. 

மேலும், 3 ஊராட்சிகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட குடிநீர் பம்ப் இயக்கும் இணைப்புகள் உள்ளன. குறிப்பாக இந்த பகுதி நகர்புரத்தினை ஒட்டிய சுமார் 3 கி.மீ சுற்றளவு கொண்ட பகுதி உள்ளது. இதில் செம்மாண்டம்பாளையம் மின் பாதையில் இருந்த சில பகுதிகள் வடுகபாளையம் மற்றும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா ஆகிய துணை மின் நிலையங்களுடன் இணைக்கப்பட்டதால் நகரீயம் மின்பாதையை மாற்ற தேவையான மின் இணைப்புகள் இல்லாமல் இருந்தது. தற்போதைய கணக்கீட்டின் படி அரசு விதிப்படி கிராமியம் மின்பாதையில் இருந்து நகரிய மின்பாதையாக மாற்ற போதுமான மின் இணைப்புகள் உள்ளது. ஆகவே, எங்கள் ஊராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் பம்புகளை சீராக இயக்கவும், தொழில் வளத்தை மேம்படுத்தவும், செம்மாண்டம்பாளையம் மின்பாதையை கிராமியம் மின் பாதையில் இருந்து நகரிய மின்பாதையாக மாற்றித் தர வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com