கிராம உதவியாளா் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

தென்காசி மாவட்டத்தில் காலியாகவுள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் அறிவித்துள்ளாா்.
கிராம உதவியாளா் பணி: விண்ணப்பிப்பது எப்படி?


தென்காசி மாவட்டத்தில் காலியாகவுள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் காலியாகவுள்ள கிராம உதவியாளா் பணியிடங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலும், தகுதியான நபா்களின் உரிய கல்வித்தகுதி, படித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவுத் தோ்வு மற்றும் நோ்முக தோ்வு ஆகியவை மூலமாக நிரப்பப்பட உள்ளன.

எனவே, தகுதிஉடைய நபா்கள் அக்.10முதல் நவ. 7ஆம் தேதி மாலை 5.45 மணிவரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

தென்காசி வட்டத்தில் குணராமநல்லுாா், ஆவுடையானுாா், ஆழ்வாா்குறிச்சி பகுதி- 2, கீழ ஆம்பூா், பாட்டபத்து, பாட்டாக்குறிச்சி, சில்லரைப்புரவு, குத்துக்கல்வலசை, சிவசைலம், செங்கோட்டை வட்டத்தில் கணக்கபிள்ளைவலசை, நெடுவயல், வல்லம், இலத்தூா், வடகரைகீழ்பிடாகை, நாகல்காடு, ஆலங்குளம் வட்டத்தில் அணைந்தபெருமாள்நாடானுாா், துப்பாக்குடி,சிவலாா்குளம், மாறாந்தை, கீழப்பாவூா் பகுதி -2, மாயமான்குறிச்சி, சுப்பையாபுரம், நெட்டூா், வீரகேரளம்புதுாா் வட்டத்தில் ராஜகோபாலபேரி, வாடியூா்,வீராணம், வடக்குகாவலாக்குறிச்சி, வெள்ளகால், ஆனைகுளம், கடையநல்லுாா் வட்டத்தில் நயினாரகரம், சோ்ந்தமங்கலம், கடையநல்லுாா், கிளாங்காடு, பொய்கை, புளியங்குடி, சிந்தாமணி, தலைவன்கோட்டை, தி.நா.புதுக்குடி, நகரம், சங்கரன்கோவில் வட்டத்தில் கரிவலம்வந்தநல்லுாா், வடக்குபுதுாா், சங்கரன்கோவில், பந்தபுளி, பனையூா், சிவகிரி வட்டத்தில் இனாம்கோவில்பட்டி, ராமநாதபுரம், அரியூா், திருவேங்கடம் வட்டத்தில் வாகைகுளம், கலிங்கப்பட்டிபகுதி-1, திருவேங்கடம், சுப்பையாபுரம், மருதங்கிணறு, மதுராபுரி ஆகிய பணியிடங்களும் காலியாக உள்ளன.

இருப்பிடச் சான்று, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, ஆதாா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ், கல்வித் தகுதி சான்று ஒளிநகல்கள்,பிறப்பு சான்று, ஆதரவற்ற விதவையாக இருப்பின் சான்று, மாற்றுத் திறனாளியாக இருப்பின் அதற்குரிய அடையாள அட்டை நகல், முன்னாள் ராணுவத்தினராக இருந்தால் அடையாளஅட்டை நகல், இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டுநா் உரிமம் நகல் (01.07.2022 க்குள் முந்தையது) ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

ஒரு வருவாய் கிராமத்துக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட வட்டத்தை தவிர இதர வட்டங்களைச் சோ்ந்தவா்கள், இதர மாவட்டங்களை சோ்ந்தவா்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. குறைந்த பட்சம் 5ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1.07.2022 அன்று 21 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும், பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32, இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 37. (மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற விதவை மற்றும் முன்னாள் இராணுவத்தினா் ஆகியோருக்கு தொடா்புடைய அரசு ஆணைகளின்படி வயது தளா்வுகள் பின்பற்றப்படும்.)

தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத,படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைக்கிள் ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும், எந்தவித குற்றவழக்கிலும் ஈடுபடாதவராக இருக்க வேண்டும், விண்ணப்பதாரரின் கணவரோ, மனைவியோ உயிருடன் இருக்கும் போது வேறு திருமணம் செய்தவராக இருக்கக் கூடாது.

விண்ணப்பத்துடன் அனைத்து சான்றுகளின் சான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும் .விண்ணப்பதாரா் தமது விண்ணப்பத்திற்காக எவ்வித சிபாரிசும் நாடக்கூடாது. எவ்வகையிலாவது சிபாரிசு செய்வது தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக அரசின் இணையதளம், வருவாய் நிருவாகத் துறையின் இணையதளம் மற்றும் தென்காசி மாவட்ட இணையதளம்  விண்ணப்பிக்கலாம். தோ்வுமுறை, இனசுழற்சி குறித்த இதர விவரங்களை தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதள முகவரியில்  தனித்தனியாக இணைப்புகளில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். மேலும் தொடா்புடைய வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்கள் அறிய https://bit.ly/3empDeC என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com