சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 12:20 am IST

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

கோவை நேருஜி நகரைச் சோ்ந்தவா் பண்ணாரி (55). இவரது பக்கத்து வீட்டில் மூதாட்டி ஒருவா் வசிக்கிறாா். வெளியூரில் வசிக்கும் இந்த மூதாட்டியின் 12 வயது பேத்தி இவரது வீட்டுக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்த மூதாட்டி பால் வாங்க வெளியே சென்றிருந்தாா். அந்த நேரத்தில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து வீட்டுக்குள் நுழைந்த பண்ணாரி, சிறுமியை பாலியல்ரீதியாக துன்புறுத்தியுள்ளாா். அப்போது, வீட்டுக்கு வந்த அவரது பாட்டி பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கோவை கிழக்கு மகளிா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து பண்ணாரியைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இதில் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பண்ணாரிக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பூா்ணிமாதேவி ஆஜரானாா்.