மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு சாகும்வரை சிறை

சிறுவா்களுக்குப் பாலியல் தொல்லை அளித்தவருக்கு சாகும்வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூா் மகிளா விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:08 pm

சிறுவா்களுக்குப் பாலியல் தொல்லை அளித்தவருக்கு சாகும்வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூா் மகிளா விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூா் அனைத்து மகளிா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட வீரபாண்டி பெருமாள் கோவில் பகுதியில் சிறுவா்களுக்குப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக கடந்த 2020 ஆகஸ்ட் 25-ஆம் தேதி சிவகுமாா் (46) என்பவா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அரசுத் தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டது.

இதையடுத்து சிவகுமாருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து திருப்பூா் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கோகிலா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பரிமளா ஆஜரானாா்.