குருதாஸ்பூர்: பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் பஞ்சாப்பின் குருதாஸ்பூர் பகுதியில் பறந்து வந்த டிரோனை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுவீழ்த்தியுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள், அதிகாலை 4.35 மணிக்கு டிரோன் ஒன்று பறந்து வருவதைக் கண்டறிந்தனர். உடனடியாக அதனை சுட்டு வீழ்த்தினர் என்று எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. கேரள நரபலி: தம்பதி பற்றிய அதிர்ச்சித் தகவலைச் சொல்லும் அண்டைவீட்டார்
உடனடியாக, டிரோன் விழுந்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த டிரோனில் என்ன கொண்டு வரப்பட்டது என்பது குறித்து தேடப்பட்டு வருகிறது.
கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் 191 டிரோன்கள் பறந்து வந்திருப்பதாகக் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது. இது உள்நாட்டு பாதுகாப்பு மீதான கவலையை அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


