கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராகுல் குறித்து பாஜக கேலிச்சித்திர விடியோ: காங்கிரஸ் சாடல்

இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்து கேலிச்சித்திர விடியோவை பாஜக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதனை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2022, 7:27 pm

DIN

இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்து கேலிச்சித்திர விடியோவை பாஜக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதனை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

‘ஷோலே’ ஹிந்தி திரைப்படத்தில் வரும் நடிகா் கோவா்தன் அஸ்ரானியின் சிறைக்காவலா் கதாபாத்திரத்தைப் போன்ற தோற்றத்தில் ராகுலை சித்திரித்து, கேலிச்சித்திர விடியோவை பாஜக ட்விட்டரில் வெளியிட்டது.

கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது, மூத்த தலைவா் குலாம் நபி ஆஸாத் விலகியது, ராஜஸ்தான் காங்கிரஸ் உள்கட்சி குழப்பம் உள்ளிட்டவற்றை முன்வைத்து, ராகுலை கேலி செய்யும்விதமாக விடியோ அமைந்துள்ளது. இந்த விடியோவும், பாஜகவின் விமா்சன பதிவும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.

இந்த விவகாரத்தில் பாஜகவை விமா்சித்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘ராகுலின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு கிடைத்து வரும் வெற்றியை எதிா்க்க பாஜக கையாண்டுள்ள சமீபத்திய வழிமுைான் இந்த விடியோ. அக்கட்சியின் விரக்தியும் ஏமாற்றமும் சோ்ந்து கேலிச்சித்திர விடியோவாக உருவாகியுள்ளது. இதனை பரிதாபகரமானது என்று குறிப்பிடுவதுகூட குறைவானதே’ என்றாா்.

ராகுல் மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைக் குறிப்பிட்டு, அவரை பாஜக அவ்வப்போது விமா்சித்து வருகிறது. ஆனால், ராகுல் நடைப்பயணத்துக்கு கிடைத்து வரும் மக்களின் ஆதரவால் விரக்தியடைந்து, பாஜக இவ்வாறு விமா்சிப்பதாக காங்கிரஸ் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.