அடுத்து இந்தியில் பொறியியல் புத்தகங்கள்: மத்திய அமைச்சர் அமித்ஷா

மருத்துவத்திற்கு அடுத்தபடியாக இந்தியிலும் பொறியியல் கல்விக்கான புத்தகங்கள் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 
அடுத்து இந்தியில் பொறியியல் புத்தகங்கள்: மத்திய அமைச்சர் அமித்ஷா

மருத்துவத்திற்கு அடுத்தபடியாக இந்தியிலும் பொறியியல் கல்விக்கான புத்தகங்கள் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நாட்டில் முதன்முறையாக இந்தி மொழியில் மருத்துவப் படிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியில் மருத்துவப் படிப்புக்கான முதலாமாண்டு புத்தகங்களையும் அவர் வெளியிட்டார். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். 

இதன்படி 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 3 பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்படவுள்ளன. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, மருத்துவத்திற்கு அடுத்தபடியாக இந்தியிலும் பொறியியல் கல்விக்கான புத்தகங்கள் வெளியிடப்படும். நாடு முழுவதும் எட்டு மொழிகளில் பொறியியல் புத்தகங்களின் மொழிபெயர்ப்பு தொடங்கப்பட்டுள்ளது. 

கல்வித்துறையின் மறுமலர்ச்சி, மறுகட்டமைப்புக்கான தருணமாக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் இத்தருணம் பொறிக்கப்படும். புதிய கல்விக்கொள்கையின் மூலம் மாணவர்களின் தாய்மொழிக்கு பிரதமர் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். எல்லா நிகழ்ச்சியிலும் இந்தி மொழியில் பேசி நாட்டுக்கும், தாய்மொழிக்கும் பிரதமர் மோடி மரியாதை செய்கிறார் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com