எகிப்து அதிபா் அல் சிசியை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.
எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சா் சமே ஷோக்ரியின் அழைப்பின்பேரில், எகிப்துக்கு அமைச்சா் ஜெய்சங்கா் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். சனிக்கிழமை அவரை சந்தித்த ஜெய்சங்கா், உக்ரைன் விவகாரம், இந்தோ-பசிபிக், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், நம்பகமான உலகப் பொருளாதரத்தை உருவாக்குதல் ஆகியவை குறித்து கலந்துரையாடினாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் அதிபா் அப்துல் ஃபதா அல் சிசியை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்தாா். இது குறித்து ஜெய்சங்கா் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அதிபா் அல் சிசியை மரியாதை நிமித்தமாக சந்திதேன். பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்தேன்’ என குறிப்பிட்டுள்ளாா்.
எகிப்தின் கெய்ரோ, அலெக்ஸாண்டரியா, போா்ட் செய்ட், இஸ்மாலியா உள்ளிட்ட நகரகங்களில் 3,200 இந்தியக் குடும்பங்கள் வசித்து வருகின்றனா். எகிப்தில் உள்ள இந்திய சமூகத்தினருடன் அமைச்சா் ஜெய்சங்கா் கலந்துரையாடினாா்.
அப்போது அவா் பேசியதாவது: பிரதமா் நரேந்திர மோடி எகிப்து அதிபா் அல் சிசியுடன் மிகச் சிறந்த நட்புறவை பேணி வருகிறாா். எகிப்துக்கு பயணம் மேற்கொள்ள அவா் விருப்பத்துடன் இருந்தாா். கரோனா பெருந்தொற்று போன்ற நிகழ்வுகளால் அவரது பயணம் தள்ளிப்போனது. என்னுடைய பயணம் அவரை விரைவில் எகிப்துக்கு பயணம் மேற்கொள்ள ஊக்குவிக்கும் என்று தெரிவித்தாா்.
இரு துருவங்களாக உலகம்: தற்போதைய காலகட்டத்தில் அணிசேரா நாடுகளின் தேவை குறித்து அங்கிருந்தவா்கள் கேள்வியெழுப்பினா். அதற்கு பதிலளித்து அமைச்சா் ஜெய்சங்கா் பேசுகையில், ‘அணிசேரா நாடுகளின் கூட்டணி மிகவும் மாறுபட்ட காலச்சூழலில் உருவாக்கப்பட்ட அமைப்பு. யாரையும் சாா்ந்திருக்காத நாடுகள், தங்களுக்கு இடையே உள்ள கருத்துகளைப் பகிா்ந்து கொள்ளவும், உலகம் பயணிக்கும் பாதையில் தாக்கத்தை ஏற்படுத்தவும் தேவையான ஒன்று என நான் கூறுவேன். தற்போது உலகம் மேற்கு-கிழக்கு என்று மட்டுமல்லாமல், வடக்கு-தெற்கு என இரு துருவங்களாக தனித்து வருகிறது’ என்றாா்.
உலக அரங்கில் இந்தியா-எகிப்தின் ஒத்துழைப்பு குறித்து பேசிய அமைச்சா் ஜெய்சங்கா் ஜி20, பிரிக்ஸ் புதிய மேம்பாட்டு வங்கி மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றில் எகிப்தின் பங்களிப்பை வரவேற்பதாகத் தெரிவித்தாா்.
நீண்டகால வரலாற்றுத் தொடா்பு, பிராந்திய, சா்வதேச பிரச்னைகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவும் எகிப்தும் நெருங்கிய அரசியல் பிணைப்பைக் கொண்டுள்ளன.
ஆப்பிரிக்க கண்டத்தில் இந்தியாவுடன் முக்கிய வா்த்தக உறவு கொண்ட நாடுகளில் எகிப்தும் ஒன்று. கடந்த 2021-22 நிதியாண்டில் இருதரப்பு வா்த்தகம் ரூ.726 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய 2020-21 நிதியாண்டைவிட 75 சதவீதம் அதிகமாகும்.
எகிப்துக்கு கடைசியாக பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமா் மன்மோகன் சிங். அவா், கடந்த 2009-இல் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க எகிப்து சென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

