

பாலியல் குற்றவாளிகளுடன் பிரதமர் மோடி துணை நிற்கிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரத்தின்போது, பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அவரது குழந்தை உள்பட 7 உறவினா்களைக் கொன்ற வழக்கின் 11 குற்றவாளிகளை மாநில அரசு ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுவித்தது.
இதனைத் தொடர்ந்து எழுந்து புகாரில், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய, மத்திய உள் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘செங்கோட்டையிலிருந்து பெண்களுடைய மதிப்பு குறித்து பேசுகிறார்கள். ஆனால் உண்மையில், பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார்கள். பிரதமரின் வாக்குறுதிக்கும் நோக்கத்திற்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக உள்ளது. பிரதமர் பெண்களை ஏமாற்றியுள்ளார்.’ எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.