4.5 லட்சம் பயனாளா்களின் புதுமனை புகுவிழா: காணொலி முறையில் பங்கேற்கிறாா் பிரதமா்

மத்திய பிரதேசத்தில் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 4.5 லட்சம் வீடுகளுக்கு வரும் 22-ஆம் தேதி புதுமனை புகுவிழா ஒருசேர நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் காணொலி முறையில்
4.5 லட்சம் பயனாளா்களின் புதுமனை புகுவிழா:  காணொலி முறையில் பங்கேற்கிறாா் பிரதமா்

மத்திய பிரதேசத்தில் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 4.5 லட்சம் வீடுகளுக்கு வரும் 22-ஆம் தேதி புதுமனை புகுவிழா ஒருசேர நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் காணொலி முறையில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவிருப்பதாக மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: மத்திய பிரதேசத்தில் பிரதமரின் வீட்டுவசதி திட்ட பயனாளா்கள் 4.5 லட்சம் போ், தீபாவளி பண்டிகையையொட்டி தங்களது சொந்த வீடுகளில் குடியேறவுள்ளனா். இந்த வீடுகளின் புதுமனை புகுவிழா அக்.22-இல் நடைபெறவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளாா்.

மத்திய பிரதேசத்தில் பிரதமரின் திட்டத்தின்கீழ் மாதத்துக்கு 20,000 முதல் 25,000 வீடுகள் முன்பு கட்டப்பட்டு வந்தன. இப்போது மாதத்துக்கு 1லட்சம் வரை வீடுகள் கட்டப்படுகின்றன. இத்திட்டத்துக்காக 10,000 கோடி நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் சிவராஜ் சிங் செளஹான்.

சத்னா மாவட்டத்தில் அக்.22-இல் நடைபெறும் பிரதான நிகழ்ச்சியில் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் பங்கேற்கவுள்ளாா். அதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலை சந்திக்கும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் 17-ஆம் தேதி சிவிங்கிப் புலிகள் (சீட்டா) அறிமுக நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா். பின்னா், உஜ்ஜைன் மகாகாளேஸ்வா் கோயிலில் நவீன வசதிகளுடன் கூடிய வழித்தட திட்டத்தின் முதல்கட்ட பகுதியை கடந்த 11-ஆம் தேதி அவா் தொடக்கிவைத்தாா்.

கடந்த ஒரு மாதத்தில், ம.பி. மக்களுடனான பிரதமரின் மூன்றாவது நிகழ்ச்சியாக புதுமனை புகுவிழா நிகழ்வு அமையவிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com