தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா: சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில், வரும் சனிக்கிழமை மாபெரும் வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைக்கிறார்.

News image

மாபெரும் வேலைவாய்ப்பு விழா: சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Updated On :20 அக்டோபர் 2022, 10:52 am


புது தில்லி: நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில், வரும் சனிக்கிழமை மாபெரும் வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியின்போது, பல்வேறு துறைகளில் பணிக்கு சேர்ந்த 75,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி, அவர்களுக்கு மத்தியில் பிரதமர் உரையாற்றவும் இருக்கிறார்.

நாட்டின் குடிமக்களின் நலன் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவது போன்ற நாட்டு நலனில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் பொறுப்பை அவர் நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

ஏற்கனவே பல்வேறு துறைகளிலும் காலியாக இருக்கும் மற்றும் ஒதுக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார்.

இந்த புதிய வேலை வாய்ப்புகள் அனைத்தும் நாட்டின் 38 அமைச்சக மற்றும் துறைகளில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்புவதன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.